14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரம் - சொகுசு விடுதி உரிமையாளர் உட்பட 3 பேர் கைது

கர்நாடகாவைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கேரளாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update: 2020-02-09 07:13 GMT
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்திற்குட்பட்ட சொகுசு விடுதிகளில் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, 14 வயது சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்திருந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து,  சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வயநாட்டை சேர்ந்த இலியாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கர்நாடக மாநிலம் சிக்மகளூரை சேர்ந்த பர்சானா என்ற பெண்ணின் உதவியுடன், சிறுமியை கேரளா அழைத்து வந்து, பல அரசியல் பிரமுகர்களின் பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்தியதாக தெரிவித்தார். இதற்கு உதவிகரமாக இருந்த  மலப்புரத்தை சேர்ந்த மன்சூர், நிசார் பாபு, வயநாடு சொகுசு விடுதி உரிமையாளர் முகம்மது பஷீர் ஆகியோரை, திருவம்பாடி போலீசார் கைது செய்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்