"கேரள சிறைகளில் காணொலி காட்சி வசதி" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

கேரளாவில், கைதிகளை சிறையில் இருந்தபடியே, நீதிபதிகள் முன் ஆஜர்படுத்துவதற்காக அம்மாநில அரசு பல கோடி ரூபாய் செலவில் காணொளி காட்சி வசதியை உருவாக்கி வருகிறது.

Update: 2019-10-23 09:18 GMT
கேரளாவில், கைதிகளை சிறையில் இருந்தபடியே, நீதிபதிகள் முன் ஆஜர்படுத்துவதற்காக அம்மாநில அரசு பல கோடி ரூபாய் செலவில் காணொளி காட்சி வசதியை உருவாக்கி வருகிறது. இது தொடர்பாக பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் பினராயி விஜயன், கேரளாவின் 11 மாவட்டங்களில் உள்ள 57 சிறைகளையும், நீதிமன்றங்களையும் இணைக்கும் விதமாக காணொளி காட்சி நடவடிக்கைகள், தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வருகிற டிசம்பர் மாதம் முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக, சிறைகளில் 470 ஸ்டுடியோக்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்