புதுச்சேரியில் சிறை கைதி உயிரிழந்த வழக்கு : ஜெயில் சூப்பிரண்டு சரண்

புதுச்சேரியில் சிறைக் கைதி உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஜெயில் சூப்பிரண்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.;

Update: 2019-09-21 03:32 GMT
புதுச்சேரியில் சிறைக் கைதி உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஜெயில் சூப்பிரண்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயமூர்த்தி என்ற இளைஞரை, புதுச்சேரி பாகூர் போலீசார் தாக்கியதில் அவர் உயிர் இழந்தார். இதனையடுத்து பாகூர் உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதன்  உள்ளிட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் அதிகாரிகள் 4 பேரையும் சஸ்பெண்டு செய்து அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து 4 பேரும் தலைமறைவாகினர். இந்நிலையில், ஜெயில் சூப்பிரண்டு பாஸ்கரன்  புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். நீதிபதி சுபா அன்புமணி உத்தரவின் பேரில் காலாப்பட்டு மத்திய சிறையில்  பாஸ்கரன் அடைக்கப்பட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்