ராஜஸ்தானில் பந்தல் சரிந்து 14 பேர் பலி - பலர் படுகாயம்

ராஜஸ்தானில் பந்தல் சரிந்து பலியான 14 பேரின் குடும்பத்திற்கு தலா 5 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாயும் நிதியுதவி வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-06-24 03:42 GMT
ராஜஸ்தானில் பந்தல் சரிந்து பலியான 14 பேரின் குடும்பத்திற்கு தலா 5 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாயும் நிதியுதவி வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பார்மர் மாவட்டம் ஜசோல் கிராமத்தில் கதாகாலேட்சப நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அமைக்கப்பட்ட பந்தலின் ஒரு பகுதி, காற்று பலமாக வீசியதால்  சரிந்து விழுந்ததில் உள்ளே அமர்ந்திருந்தவர்கள் சிக்கி கொண்டனர். இரும்பு மேற்கூரை கம்பிகள் விழுந்ததில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு  இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்