சுட்டெரிக்கும் அக்னி வெயில் - விலங்குகள், பறவைகளை காக்க புதிய ஏற்பாடு
அக்னி வெயிலின் தாக்கம் காரணமாக புதுச்சேரி வனத்துறையில் உள்ள பறவைகள் மற்றும் விலங்குகளின் மீது தண்ணீரை அடித்தும், குளுமையான பழ வகைகளை கொடுத்தும் அவற்றை பாதுகாத்து வருகின்றனர்.;
அக்னி வெயிலின் தாக்கம் காரணமாக புதுச்சேரி வனத்துறையில் உள்ள பறவைகள் மற்றும் விலங்குகளின் மீது தண்ணீரை அடித்தும், குளுமையான பழ வகைகளை கொடுத்தும் அவற்றை பாதுகாத்து வருகின்றனர்.
புதுச்சேரி வனத்துறையில் மான்கள், குரங்குகள், மயில்கள்,பல்வேறு வகையான பாம்புகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கத்திரி வெயிலின் தாக்கம் காரணமாக உஷ்ணம் தாங்க முடியாமல் பறவைகள் மற்றும் விலங்குகள் உயிரிழக்க நேரிடும் என்ற காரணத்தால் அவற்றை பாதுகாக்கும் வகையில் அதன் மீது குளிர்ச்சியான தண்ணீரை பீய்ச்சி அடித்து வருகின்றனர். குளிர்ந்த பழங்களும் வழங்கப்படும் வருகின்றன. வனத்துறையினரின் இந்த செயல் பொதுமக்களிடையே மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது.