10% இட ஒதுக்கீடு வழக்கு : ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது.

Update: 2019-03-11 10:07 GMT
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அன்றைய தினம் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து அன்றைய தினம் முடிவு செய்யப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்