"மக்களவை தேர்தலில் போட்டியிட 10 தொகுதிகள் கேட்டுள்ளோம்" - முன்னாள் பிரதமர் தேவகவுடா தகவல்

டெல்லியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்து பேசினார்.

Update: 2019-03-06 20:19 GMT
டெல்லியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்து பேசினார். கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 12 தொகுதிகளில் போட்டியிட மதச்சார்பற்ற ஜனதா தளம் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது, காங்கிரஸ் கட்சியின் கே.சி.வேணுகோபால் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் டேனிஷ் அலி ஆகியோர் உடன் இருந்தனர்.இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவகவுடா, 10 தொகுதி வரை கேட்டதாகவும், கே.சி.வேணுகோபால் மற்றும் டேனிஷ் அலி  ஆகியோருடன் ராகுல் காந்தி பேச்சு நடத்திய பின்  இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்