"பம்பாவை சீரமைக்க மத்திய அரசு தடையாக உள்ளது" - பா.ஜ.க. மீது கேரள அறநிலையத்துறை அமைச்சர் புகார்

சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களின் பயன்பாட்டிற்காக பம்பை ஆற்றை புனரமைக்க மத்திய அரசு தடையாக உள்ளதாக அம்மாநில அறநிலையத் துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2018-11-17 21:46 GMT
சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களின் பயன்பாட்டிற்காக பம்பை ஆற்றை புனரமைக்க மத்திய அரசு தடையாக உள்ளதாக அம்மாநில அறநிலையத் துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். வரலாற்றில் முதன்முறையாக கார்த்திகை முதல் தேதி, கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தி அய்யப்ப பக்தர்களுக்கும் இந்துக்களுக்கும் பா.ஜ.க. சிரமத்தை ஏற்படுத்தியதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.  சபரிமலை மட்டுமின்றி பெரும்பான்மையான கோயில்களில் சிறப்பு வழிபாடு தொடங்கும்  நாளில், பா.ஜ.க. நடத்திய முழு அடைப்பு போராட்டம் அனைத்து தரப்பு மக்களுக்கும் சிரமத்தை உருவாக்கியதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டி உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்