களைகட்டும் நவராத்திரி பிரம்மோற்சவம் : சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

திருமலை நவராத்திரி விழாவின் 3ஆம் நாளான இன்று, மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தார்.

Update: 2018-10-12 10:29 GMT
திருமலை ஏழுமலையான் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு பிறகு, நவராத்திரி பிரம்மோற்சவம், அங்குரார்ப்பணம் நிகழ்வுடன் தொடங்கியது. 3ஆம் நாளான இன்று மலையப்ப சுவாமி நரசிம்மர் அவதாரத்தில் சிம்ம வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் உலா வந்தார். அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷம் எழுப்பி மலையப்பரை தரிசனம் செய்தனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் கோலாட்டம் ஆடியும் பஜனைகள் பாடிய படியும், மகா விஷ்ணுவின் அவதாரங்களை விளக்கும் வேடம் அணிந்தும் ஊர்வலத்தில் பங்கேற்றனர். சுவாமி வீதியுலாவில் கேரள சண்டை மேளம், நாதஸ்வரம், மும்பை டிரம்ஸ் குழுவின் இசைக்கச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Tags:    

மேலும் செய்திகள்