திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பவித்திர உற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பவித்ர உற்சவத்தையொட்டி, யாக சாலையில் பவித்ர மாலைகளை வைத்து சிறப்பு பூஜைகள் தொடங்கின.

Update: 2018-08-21 12:01 GMT
திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  பவித்திர உற்சவத்தின் முதல் நாளான இன்று பவித்ர மாலைகள் சமர்ப்பணம் நடைபெற்றது. இதையொட்டி பவித்ர மாலைகள் யாகசாலையில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சம்பங்கி மண்டபத்தில் பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் சுகந்த திரவியங்களை கொண்டு உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.  

இதையடுத்து, தங்க, வைர, வைடூரிய ஆபரணங்களுடன் சிறப்பு அலங்காரத்தில் மலையப்பசாமி வலம் வருகிறார். ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராக 4 மாட வீதிகளில் வலம் வந்து அருள் பாலிக்கிறார். யாகசாலையில் வைக்கப்பட்ட பவித்திர மாலைகள் அனைத்தும் உற்சவருக்கும், மூலவருக்கும் நாளை சமர்ப்பிக்கப்படுகிறது. நாளை மறுநாள் பவித்ர உற்சவம் நிறைவு பெறுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்