கேரளா வெள்ளம் : 1 நாள் சம்பளத்தை வழங்கிய புதுச்சேரி அரசு ஊழியர்கள்
பதிவு: ஆகஸ்ட் 20, 2018, 04:28 PM
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதுச்சேரி மாநில அரசு ஊ​ழியர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளத்தை வழங்குகின்றனர்.அதன்படி மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவரின் சம்பளமான 5 கோடி ரூபாயை முதலமைச்சர் நாராயணசாமியிடம் வழங்க உள்ளதாக தெரிவித்தனர்.மேலும் அரசு சார்பு நிறுவனங்கள்,பொதுமக்கள் என பல தரப்பில் இருந்தும் நிவாரண நிதிக்காக பணம் வழங்கப்பட்டது.