கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆய்வு...

கேரள வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உதவும் வகையில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறையில், அம்மாநில முதலமைச்சர் பின்ராயி விஜயன் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2018-08-20 05:50 GMT
கேரளாவில் பெய்த, வரலாறு காணாத கனமழையில்  சிக்கி தவிக்கும் மக்களை மீட்கவும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்கவும், திருவனந்தபுரத்தில், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறையில், இருபத்தைந்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆய்வு மேற்கொண்டார். மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகள் குறித்த விபரங்களை, கட்டுப்பாட்டு அறை ஊழியர்களிடம் பினராயி விஜயன் கேட்டறிந்தார்.

தேவாலயத்தில் தஞ்சம் அடைந்துள்ள 400 குடும்பங்கள்

கேரளாவின் பத்தனம்திட்டா பகுதியில் உள்ள தெக்கமலா என்னும் இடத்தில், தனியார் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில், 400 குடும்பங்களுக்கும் மேல் தஞ்சம் அடைந்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்