துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் கோயில் கும்பாபிஷேகம்
பதிவு: ஜூன் 25, 2018, 08:47 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் சோத்துப்பாறை செல்லும் சாலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில், திருப்பரங்குன்றம் கோயிலின் ராஜபட்டர் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றினார்.  இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.