காவிரி மேலாண்மை ஆணையம் : அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிப்போம் - டி.கே.சிவகுமார்

காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது கர்நாடகா மாநிலத்திற்கு இழைத்த அநீதி என்றும், இதுதொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிப்போம் என அந்த மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

Update: 2018-06-25 14:02 GMT
காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில முதலமைச்சர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஸ்வர், நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார், சட்ட வல்லுநர்கள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் டி.கே.சிவக்குமார், கர்நாடகாவின் அனுமதி இல்லாமல் ஆணையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்ததன் மூலம் மாநிலத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றார். இதுதொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அனைத்து கட்சி கூட்டம் மற்றும் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூட்டி முடிவெடுப்போம் என்றார். 

மேலும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி 2 அல்லது 3 தினங்களில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்