கேட்பாரற்று கிடந்த சாக்கு மூட்டையில் நடராஜர் சிலை : கண்டெடுத்து போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

சென்னையில் கேட்பாரற்று கிடந்த சாக்கு மூட்டைக்குள் நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது.

Update: 2018-06-25 08:46 GMT
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஆட்டோ நிறுத்ததில் சாக்கு மூட்டை ஒன்று கேட்பாரற்று கிடந்தது.  அதை பார்த்த ஆட்டோ ஓட்டுனர் செல்வம் என்பவர்,  சாக்கு மூட்டையை திறந்து பார்த்த போது அதில் ஒரு அடி உயரமுள்ள பழமையான நடராஜர் சிலை இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் அச்சிலையை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார். 

இது குறித்து தகவலறிந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் மற்றும் சென்னை ரயில்வே எஸ்.பி ரோஹித் நாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த சிலை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, எந்த உலோகத்தால் ஆனது என்பது குறித்து கண்டறிய ஆய்வகத்திற்கு அனுப்ப உள்ளதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்