9-ஆம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
பதிவு: ஜூன் 23, 2018, 09:49 AM
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் 9-ஆம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். 
சங்கனூர் நேதாஜி நகரை சேர்ந்த சிவசாமி -முருகசுந்தரி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்த மகள் காவியா 11ஆம் வகுப்பும், இளைய மகள் சந்தியா 9ஆம் வகுப்பும் படித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சந்தியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 5 மணியளவில் வீட்டிற்கு வந்த முருகசுந்தரி தனது மகள் தூக்கில் சடலமாக இருப்பதை பார்த்து கதறி அழுதார். துடியலூர் போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.