பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்
பதிவு: மே 25, 2018, 11:02 AM
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ,  ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் கீழ் பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டு வருவது இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எரிபொருள் மீதான கலால் வரியை மத்திய அரசு 2 ரூபாய் குறைத்தாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும் தற்போது பிரச்சினைக்கு தீர்வு காண குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கை குறித்து அரசு ஆலோசித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.