"கோவிலுக்கு போகாதீங்க.. படத்துக்கு போங்க.." - பற்ற வைத்த மிஷ்கின்

Update: 2024-05-01 03:40 GMT

"கோயிலுக்குப் போகாதீர்கள்...சினிமா பாருங்கள்" என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்த கருத்து பேசுபொருளாகியுள்ளது... தி ப்ரூஃப் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய மிஷ்கின், இளையராஜாவாக தனுஷ் நடிப்பது தனுஷுக்குக் கிடைத்த வரம் என்றும், ராஜாவாக அவர் வேடம் போடுவது வேறு யாருக்கும் கிடைக்காதது எனவும் புகழாரம் சூட்டினார். மேலும், இந்தியாவின் மிகப்பெரிய படைப்பாக வெற்றிமாறனின் வாடிவாசல் இருக்கும் என்று சிலாகித்த மிஷ்கின், கோயிலுக்குப் போகாதீர்கள்...சினிமா பாருங்கள் என்று தெரிவித்தார். ஏனெனில் கோவிலுக்குப் போனால் பாவம் செய்து விட்டேன் மன்னித்து விடுங்கள் என்று கூறுவோம் என்றும், சினிமா உங்களை சிரிக்க வைக்கும் எனவும் மிஷ்கின் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்