ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் 'ஜெய் பீம்' | Jai Bhim | Suriya | #ThanthiTv

ஆஸ்கர் விருதுக்கான போட்டி பட்டியலில் உலகெங்கிலும் இருந்து 276 படங்கள் தேர்வாகி உள்ளன

Update: 2022-01-21 08:13 GMT
ஆஸ்கர் விருதுக்கான போட்டி பட்டியலில் உலகெங்கிலும் இருந்து 276 படங்கள் தேர்வாகி உள்ளன. இதில், ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளியன்று ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம், தமிழகத்தை தாண்டி சர்வதேச அளவில் பல்வேறு தரப்பினரிடையும் வரவேற்பை பெற்றது. சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளையும் ஜெய்பீம் வென்ற நிலையில், படத்தின் காட்சிகள் ஆஸ்கர் யூ டியூப் தளத்தில் இடம்பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இந்த நிலையில், தற்போது ஆஸ்கர் விருதுக்கான 276 படங்கள் கொண்ட நாமினேஷன் பட்டியலில் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் இடம்பெற்றுள்ளது. கடந்தாண்டு இதேபோல் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இறுதி வரை சென்றது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்