தமிழில் "தி கிரேட் இந்தியன் கிச்சன்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழில் ரீ-மேக் செய்யப்பட்டுள்ள "தி கிரேட் இந்தியன் கிச்சன்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

Update: 2022-01-01 10:13 GMT
தமிழில் ரீ-மேக் செய்யப்பட்டுள்ள "தி கிரேட் இந்தியன் கிச்சன்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இயக்குநர் ஜியோ பேபி இயக்கத்தில், மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் தி கிரேட் இந்தியன் கிச்சன். குடும்ப அமைப்பில் பெண்கள் சந்திக்கும் இன்னல்களைக் காட்சிப்படுத்தி, இந்தப் படம் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இயக்குநர் ஆர்.கண்ணன், இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்துவரும் நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் உள்ளிட்டோர் படத்தில் நடித்து உள்ளனர். இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ள படக்குழு, விரைவில் டிரெய்லர் வெளியாகும் என்றும் தெரிவித்து இருக்கிறது. 
Tags:    

மேலும் செய்திகள்