விஜய் உடன் நடிக்கும் பிரகாஷ்ராஜ்: 12 வருடத்திற்குப் பிறகு இணையும் கூட்டணி

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2021-10-08 04:46 GMT
நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து வம்சி இயக்கும் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கில்லி, போக்கிரி, சிவகாசி உள்ளிட்ட படங்களில் நடித்த இந்த கூட்டணி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் 12 ஆண்டுகளுக்கு பிறகு இணைய உள்ளது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்