ருத்ர தாண்டவம் படத்துக்கு தடை கோரிய வழக்கு- பட தயாரிப்பு நிறுவனம் பதில் அளிக்க உத்தரவு

ருத்ர தாண்டவம் படத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு பதில் அளிக்க , பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-09-30 06:15 GMT
நடிகர் ரிச்சர்ட் ரிஷி, கவுதம் மேனன் உள்ளிட்டோர்  நடிப்பில் ஜிஎம் பிலிம் கார்பரேசன் தயாரிப்பில் அக்டோபர் 1 ம் தேதி வெளி வரவுள்ள திரைப்படம் ருத்ர தாண்டவம். இந்த படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த படம் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இருப்பதாகவும், அவர்களை தவறாக சித்தரிக்கும் வகையில்  இருப்பதாகவும் சர்ச்சை எழுந்த‌து. எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என  சிறுபான்மை மக்கள் நலக்கட்சி சார்பில் படத்துக்கு தடை கோரி சென்னை 15 வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனு தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.


Tags:    

மேலும் செய்திகள்