'சூர்யா40' படத்தை இயக்கும் பாண்டிராஜ் - விரைவில் படத்தின் தலைப்பு வெளியீடு
நடிகர் சூர்யாவின் 40ஆவது திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இதனிடையே நேற்று பிறந்தநாள் கொண்டாடிய இயக்குனர் பாண்டிராஜ் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.;
நடிகர் சூர்யாவின் 40ஆவது திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இதனிடையே நேற்று பிறந்தநாள் கொண்டாடிய இயக்குனர் பாண்டிராஜ் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதன்படி, படத்தின் 35% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாகவும், எடுத்தவரை படம் நன்றாக வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஊரடங்கு நிறைவடைந்த பின் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ள பாண்டிராஜ், ஜூலை வரை டைம் கொடுங்க என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.