அடுத்த படம் - அஜித் யாரிடமும் கதை கேட்கவில்லை என தகவல்

நடிகர் அஜித்குமார் சமீபத்தில் எந்த இயக்குனரிடமும் கதை கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

Update: 2020-07-06 04:01 GMT
நடிகர் அஜித்குமார் சமீபத்தில் எந்த இயக்குனரிடமும் கதை கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது, 'வலிமை' படத்தில் அஜித்குமார் நடித்து வரும் நிலையில், அவருடைய அடுத்த படம் பற்றிய அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவர் நடித்த 'வீரம், வேதாளம், விவேகம்' ஆகிய படங்களை இயக்கிய சிவா தான் அடுத்த படத்தின் இயக்குனர் என்று ஒரு தகவல் வேகமாக பரவியது. அவர், அஜித்திடம் ஒரு கதை சொல்லியிருப்பதாக பேசப்பட்டது. விஜய் நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அஜித்தை சந்தித்து கதை சொல்லியிருப்பதாக மற்றொரு தகவல் பரவியது. ஆனால் இந்த இரண்டு தகவல்களுமே வதந்தி என்பது தெரியவந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்