மாஸ்டர் பட நாயகியின் புதிய ஆக்ஷன் முயற்சி
நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் மாளவிகா மோகனன், பாலிவுட் திரைப்படம் ஒன்றில் ஆக்ஷன் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் மாளவிகா மோகனன், பாலிவுட் திரைப்படம் ஒன்றில் ஆக்ஷன் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி சண்டை காட்சிகளில் நடிப்பதற்காக மாளவிகா மோகனன் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், ஸ்ரீதேவி நடித்த 'மாம் படத்தை இயக்கிய ரவி உத்யவார் இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.