நடிகர் , கதையாசிரியர் , வசனகர்த்தாவாக ஜொலித்த விசு

இயக்குநர் , எழுத்தாளர் , வசனகர்த்தா , நடிகர் என பன்முக தன்மை கொண்ட விசுவின் திரையுலக பயணம் பற்றிய தொகுப்பை தற்போது பார்க்கலாம்..

Update: 2020-03-23 12:12 GMT
1945 ஜூலை 1ம் தேதி பிறந்த மீனாட்சிசுந்தரம் ராமசாமி விஸ்வநாதன் 
விசு என்ற சுருக்கமான பெயருடன் அழைக்கப்பட்டு, பின்னர் அதே பெயரிலேயே வெகுவாக அறியப்பட்டார்.

நாடகத்தில் இருந்து சினிமா துறையில் தடம் பதித்த விசு ,
கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார்.

ரஜினி நடிப்பில் 1981ம் ஆண்டு வெளியான தில்லு முல்லு படத்தில் உதவி இயக்குநராக இருந்த விசுவை பாலசந்தர் நடிக்க வைத்திருந்தார்.

1982ம் ஆண்டில் விசு கண்மணி பூங்கா என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 

அதே ஆண்டு வெளியான மணல் கயிறு திரைப்படம்  விசுவை தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரிய அளவில் கொண்டு சேர்த்தது.தொடர்ந்து குடும்ப சிக்கல்களை மைய கருவாக கொண்டு பல படங்களை இயக்கினார். 

86ம் ஆண்டு வெளியான சம்சாரம் அது மின்சாரம் படம் தேசிய விருதை பெற்றது. தொடர்ந்து பெண்களை ஈர்க்கும் விதமாக பல குடும்ப படங்களை விசு இயக்கினார். 
Tags:    

மேலும் செய்திகள்