பிரபல குணசித்திர நடிகர் பாலாசிங் காலமானார்

பிரபல குணசித்திர நடிகர் பாலாசிங், உடல்நலக்குறைவால், சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.

Update: 2019-11-27 04:59 GMT
நடிகர் நாசர் எழுதி இயக்கி நடித்த அவதாரம் படத்தின் மூலம் பாலாசிங் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இந்தியன், புதுக்கோட்டை, விருமாண்டி, எல்.கே.ஜி, மகாமுனி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில், குணசித்திர, வில்லன் மற்றும் துணை கதாபாத்திரங்களில்  பாலாசிங்க நடித்துள்ளார். நாடக கலைஞரான அவர், தொலைகாட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். 67 வயதாகும் அவருக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு, கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாலாசிங்கை அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில், அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. பின்னர், அவரது சொந்த ஊரான நாகர்கோவிலிலுக்கு உடல் எடுத்து செல்லப்பட உள்ளது. பாலாசிங்கின் மரணம் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்