மீண்டும் தெலுங்கு நடிகரை இயக்கும் ஏ.ஆர். முருகதாஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து "தர்பார்" படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர். முருகதாஸ்.

Update: 2019-07-14 14:44 GMT
சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து "தர்பார்" படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர். முருகதாஸ். இதில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார் ரஜினி. மும்பையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. "பேட்ட" படத்திற்குப் பிறகு அனிருத் இந்தப் படத்திற்கு இசை அமைக்கிறார். இந்நிலையில் ஏற்கனவே தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் இயக்கிய முருகதாஸ், அடுத்து தெலுங்கு நடிகர் அல்லுஅர்ஜூன் நடிக்கும்  படத்தை இயக்கப் போகிறார். இந்தப் படத்தில் நடிக்க தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகைகளிடம் கால்சீட் கேட்டு வருவதாக கோலிவுட்டில் பேச்சு உலா வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்