மிஸ்டர் லோக்கல் தோல்வி வருத்தமாக உள்ளது - நடிகர் சிவகார்த்திகேயன்

நட்பு, துரோகம், சாதனை கலந்ததுதான் தனது பயணம் என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

Update: 2019-06-03 09:06 GMT
நட்பு, துரோகம், சாதனை கலந்ததுதான் தனது பயணம் என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். அவரது தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படமான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா பட இசை வெளியீட்டு விழா இன்று ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. அதில் பேசிய சிவகார்த்திகேயன், மிஸ்டர் லோக்கல் படம் தோல்வி அடைந்தது வருத்தமளிப்பதாகவும், எனினும், வர்த்தக ரீதியாக தயாரிப்பாளருக்கு லாபம் என்றும் கூறினார். இனி வரும் தமது அனைத்து படமும் அனைவருக்கும் பிடிக்கும் விதமாக இருக்கும் என்றும், தமது தயாரிப்பில் அருவி பட இயக்குநர் அருண்பிரபு இயக்கத்தில் மூன்றாவது படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாகவும் சிவகார்த்திகேயன் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்