கதிகலங்க வைக்கும் 'கைதி' - டீசர்

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'கைதி' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

Update: 2019-05-31 09:43 GMT
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'கைதி' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. டீரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விவேகானந்தா பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.  'மாநகரம்' படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ள இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி உள்ள இந்த படத்தின் டீசர் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்