திரையுலகில் ஏராளமான பிரச்சனை இருக்கிறது - நடிகர் விஜய் சேதுபதி

திரையுலகில் பிரச்சனைகள் ஏராளமாக இருக்கிறது, ஆனால் அதற்கான தீர்வு தான் இன்னும் காணப்படவில்லை என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

Update: 2018-10-07 00:17 GMT
சென்னையில் '96' படக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா  நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் நந்தகோபால், இயக்குநர் பிரேம்குமார், ஒளிப்பதிவாளர்கள் சண்முக சுந்தரம்,  மகேந்திரன் தேவராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, திரையுலகில் பிரச்சனைகள் ஏராளமாக இருக்கிறது என்றும்,  ஆனால் அதற்கான தீர்வு தான் இன்னும் காணப்படவில்லை என கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்