காலா திரைப்படம் - கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு

ரஜினியின் காலா படத்தை வெளியிட உத்தரவிட முடியாது என கர்நாடகா உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

Update: 2018-06-05 09:05 GMT
* காலா திரைப்படத்தை வெளியிட வேண்டும் என உத்தரவிட முடியாது- கர்நாடகா உயர்நீதிமன்றம்.

* காலா திரைப்படம் வெளியிடப்படும் திரையரங்குகளுக்கு கர்நாடகா அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் - கர்நாடகா உயர்நீதிமன்றம்.

* காலா படம் தொடர்பாக தனுஷ் தொடர்ந்த வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு.

காலா படத்தை வெளியிட கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்தும், காலா படம் வெளியாகும் திரையரங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் தயாரிப்பாளர் தனுஷ் சார்பில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, காலா திரைப்படத்தை வெளியிட உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ளார். படத்திற்கு அரசு தடை விதிக்கவில்லை என கருத்துக் கூறிய நீதிபதி, காலா படம் வெளியாகும் திரையரங்குகளின் பாதுகாப்பை கர்நாடகா அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்