விளையாட்டு திருவிழா - (08.01.2019) : டெஸ்ட் தரவரிசை புஜாராவுக்கு 3வது இடம்
பதிவு : ஜனவரி 08, 2019, 08:45 PM
விளையாட்டு திருவிழா - (08.01.2019) : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்
விளையாட்டு திருவிழா - (08.01.2019) :

புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட் பும்ராவுக்கு திடீர் ஓய்வு அளித்த பி.சி.சி.ஐ.
சர்வதேச டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் புஜாரா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 521 ரன்கள் குவித்ததன் மூலம் இந்த உயரத்தை அவர் எட்டியுள்ளார். இதே போன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், 21 இடங்கள் முன்னேறி 17வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் உயரத்திற்கு சென்ற இந்திய விக்கெட் கீப்பர் என்ற FAROOK ENGINEER என்ற சாதனையை அவர் சமன் செய்தார். பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் ஜடேஜா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதனிடையே, ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியிலிருந்து இந்திய வீரர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், டெஸ்ட் தொடரில் பும்ரா 157 ஓவர்கள் வீசியுள்ளதால், அவருக்கு ஓய்வு தேவை என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. பும்ராவுக்கு பதில் முகமது சிராஜ் இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டி 20 போட்டியில் சித்தார்த் கவுல் பும்ராவுக்கு பதிலாக களமிறங்க உள்ளார். பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக இருந்தாலும், மற்ற வீரர்களுக்கு தங்களது திறமையை நிரூபிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் வரும் 12ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. நியூசிலாந்துக்கு எதிரான தொடர் வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது


உலகின் மிக கடினமான கார் பந்தயம்
உலகின் மிக கடினமான கார் பந்தய தொடரான பெரு மோட்டார் ரேலி தொடர் இன்று தொடங்கியது. 16 நாளில் 6 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இந்த பந்தயம் நடைபெறும். கடல், மலை, பாலைவனம் என நிலப் பரப்பு மாறும் 500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள், கார், ஜீப், பைக் என பங்கேற்பார்கள். இதில் இந்தியாவிலிருந்து சி.எஸ். சந்தோஷ் என்ற போட்டியாளர் பங்கேற்றுள்ளார். முதல் சுற்று பாலைவனத்தில் தொடங்கியது. பறந்து விரிந்த பாலைவனத்தில் வீரர்கள் கடும் செருக்கடிக்கு ஆளாகினர். இதில் கத்தாரை சேர்ந்த நாசர் வெற்றி பெற்றார். தீவிரவாத அச்சுறுத்தல் இருந்த காரணத்தால் கடந்த 10 ஆண்டுகளாக பெருவில் போட்டி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கிரிக்கெட்டை போல் மாறும் டென்னிஸ்
FAST 4 டென்னிஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரை ஆஸ்திரேலிய டென்னிஸ் வாரியம் கடந்த 4 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. 4 GAME கொண்ட இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் உலக அணியும் மோதின. காயத்திலிருந்து குணமடைந்து உலக அணிக்காக திரும்பிய நடால், ஆஸ்திரேலிய வீரர் கிர்கியாசுடன் மோதினார். இதில் 4க்கு1, 1க்கு4 என்ற செட் கணக்கில் கிர்கியாஸ் வெற்றி பெற்று நடாலுக்கு அதிர்ச்சி அளித்தார். மற்றொரு ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மில்மானை 4க்கு1, 4க்கு3 என்ற செட் கணக்கில் உலக அணியில் இடம்பெற்றுள்ள கனடாவின் ரோனிச் வீழ்த்தினார். ஆடவர் இரட்டையர் பிரிவில், நடால், ரோனிச் ஜோடி, மில்மான் கிர்கியாஸ் இணையை நேர் செட்களில் வீழ்த்தியது. இதன் மூலம் உலக அணி 2க்கு1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 

பழமையான குளிர்கால போட்டி "ஸ்கீ ஜம்பிங்" 
SKI JUMPING (ஸ்கீ ஜம்பிங்).. குளிர்கால விளையாட்டில் மிகவும் பழமையான போட்டி இது. 18ஆம் நூற்றாண்டில் பனிபிரதேச மக்கள், பொழுதுபோக்கிற்காக விளையாடினர். 1866ஆம் ஆண்டு ஸ்கீ ஜம்பிங்கிற்கான முதல் போட்டி நடத்தப்பட்டது. 1924ஆம் ஆண்டு முதல் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இந்த விளையாட்டு இடம்பெற்றுள்ளது. 90 மீட்டர் உயரம் உள்ள சாய்வலான பாதையில், சறுக்கி வரும் வீரர்கள், அந்தரத்தில் பாய்ந்து, பனித்தரையில் கீழே விழாமல் நிற்க வேண்டும். இதுவே இந்தப் போட்டியாகும். யார் அதிக தூரம் பாய்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். வீரர்கள் கீழே விழும் போது, பலத்த காயம் ஏற்படும். இதனால் இந்த விளையாட்டில் ஜொலிக்க 10 ஆண்டுகளாவது பயிற்சி தேவை. SKI JUMPING-ஐ மையப்படுத்தி ஹாலிவுட்டில் EDDIE THE EAGLE என்ற திரைப்படம் வெளியானது. 
இதில் பிரபல நடிகர் HUGH JACKMAN ஸ்கீ ஜம்பிங் செய்வது போல் காட்சிகள் இடம்பெறும்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.