விளையாட்டு திருவிழா - 30.10.2018 - மே.இ.தீவுகளை புரட்டி போட்டது இந்தியா

விளையாட்டு திருவிழா - 30.10.2018 - ஆஸி. மோட்டோ ஜி.பி. பைக் பந்தயம்
விளையாட்டு திருவிழா - 30.10.2018 - மே.இ.தீவுகளை புரட்டி போட்டது இந்தியா
x
விளையாட்டு திருவிழா - 30.10.2018 

மே.இ.தீவுகளை புரட்டி போட்டது இந்தியா
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரர் ரோஹித் சர்மாவும், அம்பத்தி ராயுடுவும் அதிரடியாக சதம் விளாசினர். 378 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டுவது மிகவும் கடினமான காரியம் தான். ஆனால், இவ்வளவு மோசமான தோல்வியை மேற்கிந்தியத் தீவுகளால் தவிர்த்திருக்க முடியும். பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும், பிராபவுன் மைதானத்தில் பொதுவாக இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு முதல் 10 ஓவர் சற்று கடினமாக இருக்கும்.  வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான அந்த கட்டத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் பார்த்து கொள்வது அவசியம். ஆனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி அடித்து ஆட வேண்டும் என்ற எண்ணத்தில் 13 ஓவர்களிலே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போதே தோல்வி உறுதியான நிலையில், அந்த அணி 56 ரன்களிலிருந்து153 ரன்களுக்கு வந்ததே அதிசயம் தான். முதல் 10 ஓவரில் விக்கெட்டுகள் விழாமல் இருந்திருந்தால் 
மேற்கிந்தியத் தீவுகள் அணி 300 ரன்களையாவது எட்டிருக்க முடியும். புவனேஸ்வர் குமாரின் பந்துவீச்சு எடுபடாம்ல் இருந்த நிலையில், இந்திய அணியின் இளம் வீரர் கலில் அகமது ஆடுகள சூழலுக்கு எற்றவாறு பந்துவீசி மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களுக்கு கடும் அதிர்ச்சி அளித்தார். இதே போன்ற பந்துவீச்சை கலில் வெளிப்படுத்தினால் நல்ல எதிர்காலம் அவருக்கு காத்துக் கொண்டிருப்பதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் நம்புகின்றனர். 

ஆஸி. மோட்டோ ஜி.பி. பைக் பந்தயம் - ஸ்பெயின் வீரர் மாவெர்க் சாம்பியன்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மோட்டோ ஜி.பி. பைக் பந்தயத் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் வீரர் Maverick Vinales கைப்பற்றினார். மெல்போர்ன் பந்தயத் தளத்தில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் முன்னணி வீரர்களின் பைக் சீறிப்பாய்ந்தது. YAMAHA நிறுவன பைக்கை ஓட்டி வந்த ZARCO,300 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற போது விபத்தில் சிக்கினார். அவர் விழுந்தது மட்டுமல்லாமல் உலக சாம்பியன் மார்க்கேஸின் பைக்கையும் அவர் சேதப்படுத்தினார். இதனால் இருவரும் போட்டியிலிருந்து விலகினர். தொடர் வெற்றிகளை குவித்த மார்க்கெஸ் விலகியதை பயன்படுத்திக் கொண்ட YAMAHA அணியின் மற்றொரு வீரரும், ஸ்பெயினை சேர்ந்த Maverick Vinales  சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். பந்தய தூரத்தை அவர், 51 நிமிடம் 21 விநாடிகளில் கடந்து முதலிடத்தை தட்டிச் சென்றார். இந்த பந்தயத்தில் பல்வேறு விபத்துகளும் நிகழ்ந்தது. Maverick Vinales வெற்றியின் மூலம் 26 பந்தயங்களுக்கு பிறகு YAMAHA நிறுவனம் முதல் வெற்றியை பதிவு செய்தது. 

WWE பொழுதுப்போக்கு மல்யுத்த போட்டி - பெண்கள் மட்டுமே கலந்துகொண்ட தொடர்

WWE பொழுதுப்போக்கு மல்யுத்த போட்டி.. நாடகத்தை போல் கதையை கொண்ட விளையாட்டு தொடர் என்றாலும் இதற்கு உலகம் முழுவதும் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இந்த நிலையில், பெண்களும், ஆண்களுக்கு நிகரானவர்கள் என்பதை உணர்த்தும் வகையில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட மல்யுத்த போட்டியை  WWE நடத்தியது. இதில் பிரபல மல்யுத்த வீராங்கனை Ronda Rousey ,Nikki Bella, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் சாம்பியன் பட்டத்தை Ronda Rousey கைப்பற்றியது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த தொடரை 150 நாடுகளை சேர்ந்த பார்வையாளர்கள் கண்டுள்ளதாக WWE நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்