விளையாட்டு திருவிழா 03.09.2018 - 18வது ஆசிய விளையாட்டு போட்டி
பதிவு : செப்டம்பர் 03, 2018, 09:22 PM
இந்தோனேஷியாவின் ஜகார்தா நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் இந்தியா மொத்தம் 69 பதக்கங்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது.
18-வது ஆசிய விளையாட்டு திருவிழா இந்தோனேஷியாவில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கியது. 15 நாட்களாக நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டி நிறைவுபெற்றது. இதில் இந்தியா சார்பில் மொத்தம் 570 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 69 பதக்கங்களை  குவித்து பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தை பிடித்தது. கடந்த 2010ல் 65 பதக்கங்கள் வென்றதே  ஆசிய விளையாட்டில் இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாக இருந்தது. தற்போது கூடுதலாக 4 பதக்கங்கள் தட்டி சென்று புதிய வரலாற்றை படைத்துள்ளது.

இதே போல் ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழக வீரர், வீராங்கனைகள் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். தமிழக வீரர்கள் மொத்தம் 19 பதக்கங்களை கைப்பற்றி அசத்தியுள்ளனர். வழக்கம் போல இந்த தடவையும் பதக்கப்பட்டியலில் சீனாவே முதலிடத்தை ஆக்கிரமித்தது. ஜப்பான், கொரியா இந்தோனேசியா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் அடுத்த நான்கு இடங்களையும் கைப்பற்றின. போட்டியின் நிறைவு விழா ஜகார்தா நகரில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.

நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி சென்றார். 2022-ம் ஆண்டிற்கான 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறுகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி : இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன ?

டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்தது. இங்கிலாந்தை காட்டிலும் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும், இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு முதல் காரணம் தொடருக்கு முன் போதுமான பயிற்சி போட்டியில் பங்கேற்காமல் இருந்தது தான். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது குறைந்தது 2 பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கும். ஆனால் இந்திய அணியோ பயிற்சி ஆட்டத்தால் எந்த வருமானமும் கிடைக்காது என்பதால் ஒரு பயிற்சி ஆட்டத்தில் மட்டும் தான் விளையாடுகிறது.

பொதுவாக இந்திய அணியின் பலமாக பேட்டிங் கருதப்படும். ஆனால் சமீப காலமாக இந்தியாவின் வேகப்பந்து வீச்சு அசுர பலத்துடன் உள்ளது. இங்கிலாந்து வீரர்களின் விக்கெட்டுகளை இந்திய பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினாலும், வெற்றி வாய்ப்பை பறிகொடுப்பது பேட்ஸ்மேன்கள் மட்டுமே. டெஸ்ட் போட்டிக்கு மிகவும் முக்கியம் தொடக்க ஆட்டக்காரர்கள் தான். ஆனால் இங்கிலாந்து தொடரில் தவான், ராகுல், முரளி விஜய் என மூவரும் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர்.

இந்திய அணியின் நடுவரிசை வீரர்கள் பார்மில் இல்லாததும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. ரஹானே, ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் வெற்றி அருகில் இருந்தும் இந்திய அணியால் எட்டமுடியவில்லை. சுழற்பந்துவீச்சை எளிதாக சமாளிக்கும் வல்லமை கொண்ட இந்திய பேட்ஸ்மேன்கள், மொயின் அலி பந்துவீச்சில் மட்டும் இந்த ஆட்டத்தில் ஒன்பது விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளனர்.மேலும் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்திலிருந்து குணமடையாத அஸ்வினை அணியில் விளையாட வைத்ததும், ஜடேஜாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டதும் இந்திய அணி நிர்வாகம் செய்த மெகா தவறுகளில் ஒன்று. தொடரை இழந்த நிலையில் கடைசி போட்டியில் பிரித்திவ் ஷா , ஹிமன்சு ரானா,கருண் நாயர் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதே சரியான முடிவாக அமையும்.

அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடர் : காலிறுதி சுற்றுக்கு நடால் முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி  சுற்றுக்கு நடப்பு சாம்பியன் நடால் முன்னேறினார். நியூயார்க்கில் நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டத்தில் ஜார்ஜியா வீரர் பசில்லாவை எதிர் கொண்ட நடால் 6க்கு 3, 6 க்கு 3, 6க்கு 7, 6க்கு 4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். 

காலிறுதியில் அர்ஜென்டினா வீரர் மார்ட்டின் டெல்

இதேபோல, அர்ஜென்டீன வீரர் மார்ட்டின் டெல் போட்ரோவும் காலிறுதி  சுற்றுக்கு முன்னேறினார். குரோசிய வீரர் கோரிச்சை அவர் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். 

மகளிர் ஆட்டத்தில் செரினா முன்னேற்றம்

இதனிடையே, மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். எஸ்தோனிய வீராங்கனை கான்பியை அவர் வீழ்த்தினார்.

இத்தாலி பார்முலா ஓன் கிராண்ட் பீரி : சாம்பியன் பட்டம் வென்ற ஹாமில்டன் 

இத்தாலி பார்முலா ஓன் கிராண்ட் பீரி கார் பந்தயத்தின் சாம்பியன் பட்டத்தை நட்சத்திர வீரர் ஹாமில்டன் கைப்பற்றினார். மோன்சா கார் பந்தய ஓடுதளத்தில் நடைபெற்ற இந்த சுற்றில் வீரர்கள் மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்தனர். 4 முறை உலக சாம்பியனும், ஜெர்மனி வீரருமான செபாஸ்டியன் விட்டல், தொடக்கத்தில் பின்தங்கி 18வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இருப்பினும் கடுமையாக போட்டியிட்டு அவர் 4 இடத்தில் பந்தயத்தை நிறைவு செய்தார். 306 கிலோ மீட்டர் கொண்ட பந்தய தூரத்தை 1 மணி நேரம் 16 நிமிடம் 54 விநாடிகளில் பிரிட்டன் வீரர் ஹாமில்டன் நிறைவு செய்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் புள்ள பட்டியலில் 256 புள்ளிகளுடன் ஹாமில்டன் முதலிடத்திலும், 226 புள்ளிகளுடன் விட்டல் 2வது இடத்திலும் உள்ளார். இந்த சீசலில் இன்னும் 7 தொடர்கள் எஞ்சி உள்ளன. 

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வோம் : தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் நம்பிக்கை

வருகின்ற ஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில்  பதக்கம் வெல்வோம் என ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு வெண்கல பதக்கம் வென்ற தமிழக வீரர் சரத் கமல் தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய நிகழ்ச்சிகள்

விளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி?

விளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை

67 views

விளையாட்டு திருவிழா - 20.11.2018 - இந்தியா Vs ஆஸி. நாளை முதல் டி-20 போட்டி

விளையாட்டு திருவிழா - 20.11.2018 - வெற்றியுடன் தொடரை தொடங்குமா இந்தியா?

38 views

விளையாட்டு திருவிழா - 16.11.2018 - ஐ.பி.எல் - நீக்கப்பட்ட வீரர்களின் விவரம்

விளையாட்டு திருவிழா - 16.11.2018 - ஐ.பி.எல். 12வது சீசனில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் டிசம்பரில் நடைபெறுகிறது.

36 views

விளையாட்டு திருவிழா - 25.10.2018 - டிராவில் முடிந்த 2வது ஒருநாள் போட்டி

விளையாட்டு திருவிழா - 25.10.2018 - இந்திய அணி செய்த தவறுகள்

105 views

பிற நிகழ்ச்சிகள்

விளையாட்டு திருவிழா - (14.01.2019) : இந்தியா ஆஸி நாளை 2வது ஒருநாள் போட்டி

விளையாட்டு திருவிழா - (14.01.2019) : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்

86 views

விளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி?

விளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை

67 views

விளையாட்டு திருவிழா - (10.01.2019) : இந்தியா Vs ஆஸி. ஒருநாள் போட்டி : நாளை மறுநாள் சிட்னியில் தொடக்கம்

விளையாட்டு திருவிழா - (10.01.2019) : ஆசிய கோப்பை கால்பந்து தொடர்: இந்தியா Vs யு.ஏ.இ. இன்று மோதல்

32 views

விளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி?

விளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல் போட்டி

31 views

விளையாட்டு திருவிழா - (08.01.2019) : டெஸ்ட் தரவரிசை புஜாராவுக்கு 3வது இடம்

விளையாட்டு திருவிழா - (08.01.2019) : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்

25 views

விளையாட்டு திருவிழா - (07.01.2019) : ஆஸி. மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை

விளையாட்டு திருவிழா - (07.01.2019) : டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.