உலகப் புகழ்பெற்ற தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம்...

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம், பக்தர்களின் விண்ணதிரும் கோஷத்துடன் தொடங்கியது.
உலகப் புகழ்பெற்ற தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம்...
x
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கியது. முக்கிய விழாவான தேர்த்திருவிழா இன்று காலை தொடங்கியது. 96 அடி உயரமும், 360 டன் எடையும் கொண்ட அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரை பக்தர்கள் வடம் பிடித்து "ஆருரா தியாகேசா" என்ற பக்திக் கோஷம் விண்ணதிர எழுப்பி இழுத்தனர். தேரோட்டம் கீழ வீதியில் தொடங்கி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக மீண்டும் மாலை 7 மணிக்குள் நிலையை வந்தடையும். 

தேரில் தியாகராஜ சுவாமிகள் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆழித்தேரைத் தொடர்ந்து அம்பாள் தேர், சண்டிகேசுவரர் தேரும் வலம் வருகிறது. ஆடி அசைந்து வரும் ஆழித்தேரைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழுமி நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின்  பாதுகாப்பிற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்