கிரிமினல் குழுக்களைக் குறி வைத்த போலீஸ்.. 9 பேர் சுட்டுக் கொலை

x

பிரேசிலின் ரியோ டி ஜெனெய்ரோவில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கிரிமினல் குழுக்களைக் குறி வைத்து காவலர்கள் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது காவலர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதில், ஒரு காவலர் காயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இருதரப்பிற்கும் இடையில் நடந்த மோதலில் 9 பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர். சா பவுலோ மாகாணத்தில் இந்த வாரம் போலீசாருக்கும் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கும் இடையில் நடந்த மோதலில் 16 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்