5 நாட்களுக்கு பின் முடிவுக்கு வந்த யுத்தம் - இவர் தான் பாகிஸ்தான் பிரதமர்..!

x

பாகிஸ்தானில் நீண்ட இழுபறிக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமைக்க முடிவாகியுள்ள நிலையில், முன்னாள் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த வாரம் நடைபெற்ற பொதுத்தேர்தலில், இம்ரான் கானின் பி.டி.ஐ. கட்சியின் ஆதரவு பெற்ற 101 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி 75 உறுப்பினர்களையும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 உறுப்பினர்களையும் கைப்பற்றியிருந்தனர். ஆட்சி அமைக்க 133 இடங்கள் தேவை என்ற நிலையில், பெரும்பான்மை கிடைக்காத‌தால், புதிய அரசு அமைவதில் குழப்பம் நீடித்து வந்த‌து. இதனால், கூட்டணி அமைக்க கடந்த 5 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த‌து. இந்நிலையில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் லீக் நவாஸ் கட்சியும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கூட்டணி அரசு அமைக்க முடிவு செய்துள்ளன. இதையடுத்து, முன்னாள் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்பை, மீண்டும் பிரதமராக்குவதற்கு நவாஸ் ஷெரீப் பரிந்துரைத்துள்ளார். இதன் மூலம் ஷெபாஸ் செரீப் மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். கூட்டணி ஆட்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சர்தாரி, பி.டி.ஐ. உட்பட அனைத்து கட்சிகளுடன் இணைந்து நல்லிணக்கத்துடன் செயல்பட உள்ளதாக அழைப்பு விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்