ஈரான் மூத்த தலைகளில் முக்கிய தலைக்கு ஷாக் கொடுத்த இன்ஸ்டா, Fb

x

ஈரான் நாட்டின் மூத்த தலைவர் அயதுல்லா கமேனி ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

content policy எனப்படும் உள்ளடக்கக் கொள்கையை மீறியதாக அயதுல்லா அலி கமேனியின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை நீக்கியுள்ளதாக மெட்டா விளக்கமளித்துள்ளது... இஸ்ரேல்-ஹமாஸ் போரை மெட்டா குறிப்பிடவில்லை என்றாலும், அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இருந்து ஹமாஸிற்கு ஆதரவு தெரிவிக்கும் கமேனியை தடை செய்யுமாறு மெட்டாவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது... ஹமாஸ் நடவடிக்கையை ஆதரித்த அவர், இத்தாக்குதலில் ஈரானின் தலையீடு இருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுத்தார்... அதேபோல் ஹமாசுக்கு ஆதரவாக ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவு நாடுகளின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதையும் கமேனி ஆதரித்தார்... இந்நிலையில், அவரது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன... 35 ஆண்டுகளாக ஈரானில் ஆட்சியில் இருக்கும் கமேனியை இன்ஸ்டாகிராமில் சுமார் 50 லட்சம் பேர் பின் தொடர்ந்து வந்தனர்...


Next Story

மேலும் செய்திகள்