இன்போசிஸ் இந்திய வம்சாவளியினருக்கு பாகுபாடுகாட்டியதாக புகார்.. பதிலளிக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

x

இன்போசிஸ் இந்திய வம்சாவளியினருக்கு பாகுபாடுகாட்டியதாக புகார்.. பதிலளிக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்காவில் இன்போசிஸ் நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு பிரிவில் துணை தலைவராக பணியாற்றிய, முன்னாள் ஊழியர் ஜில் ப்ரீஜீன் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் தான் பணிபுரிந்த காலத்தில் நிறுவனத்தில் இந்திய வம்சாவளியினரை பணியமர்த்த கூடாது; குழந்தை பெற்ற பெண்களுக்கு வேலை வழங்க கூடாது; 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு வேலை வழங்க கூடாது என சட்டவிரோத பாகுபாடு காட்டப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக நிறுவனம் மீதும், பங்குதாரர்கள் மீதும், முன்னாள் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

2018 ஆம் ஆண்டு இந்த கலாச்சாரத்தை தான் மாற்ற முயற்சித்ததால் எதிர்ப்பை சந்தித்ததாகவும் ஜில் ப்ரீஜீன் கூறியிருக்கிறார்.

ஆனால் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஜில் ப்ரீஜீன் ஆதாரங்களை வழங்காததால் வழக்கை தள்ளுபடி செய்ய இன்போசிஸ் நிறுவனம் கேட்டுக்கொண்டது.

அப்போது இன்போசிஸ் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், 21 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு இன்போசிஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்