எச்சரிக்கைகளை கண்டுகொள்ளாத ரஷ்யா.. பலத்தைக் காட்ட கருங்கடலில் போர் பயிற்சி

பல்வேறு கட்ட சமாதான பேச்சுவார்த்தைகள் மற்றும் எச்சரிக்கைகளை மீறி, கருங்கடலில் ரஷ்ய கடற்படை போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோ வெளியாகியுள்ளது.
x
பல்வேறு கட்ட சமாதான பேச்சுவார்த்தைகள் மற்றும் எச்சரிக்கைகளை மீறி, கருங்கடலில் ரஷ்ய கடற்படை போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோ வெளியாகியுள்ளது. 

எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா உக்ரைன் மீது போரிட கூடும் என அமெரிக்கா எச்சரித்திருந்த நிலையில், தனது பலத்தை காட்டும் விதமாக கிரிமீயா பகுதியில் உள்ள கருங்கடலில் நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட கப்பல்கள் கொண்டு ரஷ்யா போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதேபோல், உக்ரைன்- கிரிமீயா எல்லையில், உக்ரைன் போலீசார், பாதுகாப்பு படையினரும் போர் ஒத்திகையில்  ஈடுபட்டனர். அந்த வீடியோவும் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்