பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு - 10 குழந்தைகள் உட்பட 22 பேர் பலி

பாகிஸ்தான் நாட்டில் பனிப்பொழிவால் 22 பேர் உறைந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு - 10 குழந்தைகள் உட்பட 22 பேர் பலி
x
பாகிஸ்தான் நாட்டில் பனிப்பொழிவால் 22 பேர் உறைந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முர்ரி பகுதியில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், அங்கு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. கிட்டத்தட்ட 1 லட்சம் வாகனங்கள் முர்ரி பகுதி எஓக்கி வந்ததால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட்டது. தொடர்ந்து வாகனங்கள் அதிகரித்ததால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நேரம் செல்லச் செல்ல பனிப்பொழிவுன் அதிகரித்த நிலையில், குளிரில் அவதிப்பட்டவர்களை ராணுவத்தினரும் காவல்துறையினரும் மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது வாகனங்களில் குளிரில் உறைந்த நிலையில், 10 குழந்தைகள் உட்பட 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து முர்ரி பகுதியை இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதியாக பஞ்சாப் மாகாண அரசு அறிவித்துள்ளது. மேலும், அங்கு மருத்துவமனைகள், காவல் நிலையங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்