"ஆப்கானில் அரசியல் ரீதியான அமைதி தேவை" - ஆப்கான் தொடர்பாக சீனா கருத்து

ஆப்கானிஸ்தான் மீண்டும் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவிடக்கூடாது என சீனா கருத்து தெரிவித்துள்ளது.
ஆப்கானில் அரசியல் ரீதியான அமைதி தேவை - ஆப்கான் தொடர்பாக சீனா கருத்து
x
ஆப்கானிஸ்தான் மீண்டும் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவிடக்கூடாது என சீனா கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷான் முகமதுடன் பேசினார். இதனை தொடர்ந்து வாங் யி கூறுகையில், ஆப்கானிஸ்தானில் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுகொண்டதாக தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட சீனாவும், பாகிஸ்தானும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும் கூறினார். தற்போதைக்கு அரசியல் ரீதியான அமைதி ஆப்கானுக்கு தேவைப்படுவதாகவும், சீனா வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்