அமெரிக்க வீரரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை - குழந்தைகளை அரவணைக்கும் ராணுவ வீரர்கள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், அங்குள்ள அமெரிக்க வீரர்களிடம் ஒப்படைக்கப்படும் குழந்தைகளின் புகைப்படங்கள் அதிகளவில் வெளியாகி வருகின்றன.
அமெரிக்க வீரரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை - குழந்தைகளை அரவணைக்கும் ராணுவ வீரர்கள்
x
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், அங்குள்ள அமெரிக்க வீரர்களிடம் ஒப்படைக்கப்படும் குழந்தைகளின் புகைப்படங்கள் அதிகளவில் வெளியாகி வருகின்றன.அங்குள்ள குழந்தைகளின் நிலை குறித்து விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு.பலவீனமான அரசு.... கைவிரித்த அமெரிக்கா... தலிபான்களின் அடக்குமுறை... என அடுத்தடுத்த நிகழ்வுகளால் உடைந்து போன ஆப்கான் மக்கள்,  எப்படியாவது தங்கள் உயிரை காத்துக்கொள்ள அங்குமிங்கும் ஓடும் காட்சிகள் நம்மை கலங்க வைத்துள்ள நிலையில்... அங்குள்ள குழந்தைகளின் நிலையை எண்ணி ஒட்டுமொத்த உலகமும் தற்போது கவலை கொண்டுள்ளது.தலிபான்களிடம் இருந்து மக்களை காக்க ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு தவறிவிட்டது என பலரும் தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வரும் நிலையில், அமெரிக்க வீரர்களின் கையில் தவழும் ஆப்கான் குழந்தைகளின் புகைப்படங்கள் தற்போது பேசு பொருளாகியுள்ளது.ஆப்கான் குழந்தைகளுடன் விளையாடும் அமெரிக்க ராணுவ வீராங்கனை... குழந்தைகளை சுமந்தப்படி உலாவும் வீரர்கள்... குழந்தைகளை மடியில் வைத்து கொஞ்சும் காட்சி.... குழந்தைகளுக்கு உணவளிப்பது.அவர்களுக்கு ராணுவ முகாமில் சிகிச்சை அளிப்பது என  ஆப்கானில் இருந்து அடுத்தடுத்து புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.தங்கள் உயிரை காக்க முடியாவிட்டாலும், தங்கள் குழந்தைகளின் உயிரையாவது காப்பாற்றுங்கள் என அமெரிக்க ராணுவ வீரர்களிடம் ஆப்கான் பெற்றோர்கள் மன்றாடும் காட்சிகள் வேதனையின் உச்சம்..எப்படியாவது ஆப்கானை விட்டு வெளியேறியாக வேண்டும் என தங்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு, காபூல் விமான நிலையத்தில் மக்கள் கட்டுக்கடங்காமல் குவிந்து வரும் நிலையில், பசி, மூச்சு திணறலால் குழந்தைகள் உயிரிழக்கும் கொடூரமும் அங்கு அரங்கேறி வருகிறது. அப்படி இருக்கையில், விமானத்திற்காக காத்து கொண்டிருக்கும் போது  உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட ஏழு மாத கைக்குழந்தையை முள்வேலியை தாண்டி, பெற்றோர் அமெரிக்க வீரர்களிடம் ஒப்படைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி, பலரையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. 





Next Story

மேலும் செய்திகள்