தலிபான்கள் வசமானது ஆப்கான்: தலிபான்கள் சொன்னதும் - நடப்பதும்

தலிபான்கள் வசமான ஆப்கானிஸ்தானில் வன்முறை ஆரம்பமாகியிருக்கும் நிலையில், அங்கிருக்கும் சூழல் குறித்து விவரிக்கும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்..
தலிபான்கள் வசமானது ஆப்கான்: தலிபான்கள் சொன்னதும் -  நடப்பதும்
x
ஆப்கானிஸ்தானில் தங்கள் ஆட்சியில் வன்முறைக்கு இடமில்லை, இஸ்லாமிய சட்டத்துக்கு உட்பட்டு பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் என தலிபான்கள் அறிவித்து இருந்தாலும், அங்கிருந்து வரும் காட்சிகள் மாறுப்பட்ட சூழலையே காட்டுகிறது. 

சாலைகள், தெருக்களில் மக்கள் நடமாட்டம், கடைகள் திறப்பு என அங்கு இயல்பு வாழ்க்கை தொடங்கிவிட்டதாக காட்சியளிக்கிறது. ஆனால், மக்களோ தங்கள் நெஞ்சை பதறச்செய்யும் அச்சத்தை மறைத்தே வெளியே வருகிறோம் என்கிறார்கள். 

3016 ஆங்காங்கே ரோந்து வாகனங்களில் செல்லும் தலிபான்கள் ஒவ்வொரு நகர்வை நோட்டமிடுவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

419V நங்கார்ஹர் மாகாணத்தின் தலைநகர் ஜலாலாபாத்தில் தலிபான் கொடியை இறக்கிவிட்டு ஆப்கான் தேசியக்கொடியை ஏற்றிய இளைஞர்களை துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்