"11 பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார்" -சிக்கலில் நியூயார்க் மாகாண ஆளுநர்
பதிவு : ஆகஸ்ட் 04, 2021, 08:48 PM
அமெரிக்காவின் நியூயார்க் மாகாண ஆளுநர் ஆன்ட்ரூ குவோமோ, பல பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது, விசாரணையில் உறுதியாகியுள்ளது. உடனடியாக பதவி விலக அதிபர் வலியுறுத்த இந்த விவகாரம் அந்நாட்டு அரசியலில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் ஆளுநராக, ஜனனாயகக் கட்சியைச் சேர்ந்த ஆன்ட்ரூ குவோமோ, 2011 முதல் பதவி வகிக்கிறார்.
இவர் மீது ஏராளமான பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 
இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி விரிவான விசாரணை ஒன்றை நியூயார்க் மாகாணத்தின் அட்டார்னி ஜெனரல் லெடிஷியா ஜேம்ஸ் நடத்தி, இறுதி அறிக்கையை செவ்வாய் அன்று வெளியிட்டார்.ஐந்த மாதங்கள் நடந்த இந்த விசாரணையின் முடிவில், ஆன்ட்ரூ குவோமோ, 11 பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டை சுமத்திய, ஆளுநர் அலுவலக ஊழியர் ஒருவர், சட்ட விரோதமான முறையில் பழிவாங்கப்பட்டதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து ஆன்ட்ரூ குவோமோ தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முக்கிய ஜனனாயகக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஆனால் தான் ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று ஆன்ட்ரூ குவோமோ காணொளி மூலம் கூறியுள்ளார். 
இதைத் தொடர்ந்து அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற விசாரணை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

674 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

460 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

62 views

பிற செய்திகள்

23வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள் - உலகின் நம்பர் ஒன் தேடுதல் எந்திரம்

உலகின் மிகப் பெரிய தேடுதல் எந்திரமான கூகுள் நிறுவனம், தனது 23ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறது.

9 views

நீண்ட நாட்களுக்கு பிறகு இசை நிகழ்ச்சி - "ரோலிங் ஸ்டோன்ஸ்" இசைக்குழு நடத்தியது

அமெரிக்காவின் மிக பிரபலமான ரோலிங் ஸ்டோன்ஸ் இசைக்குழு நீண்ட நாட்களுக்கு பிறகு மேடை கச்சேரியை துவக்கியுள்ளனர்.

14 views

அச்சுறுத்தும் கால நிலை மாற்றம் - உக்ரைனில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்

கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ள அரசு கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி உக்ரைனில் போராட்டம் நடைபெற்றது.

11 views

ஆப்கானிஸ்தானில் மீட்புப் பணிகள் - இராணுவ வீரர்களை கௌரவப்படுத்திய மெர்கெல்

ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்ட ஜெர்மன் இராணுவ வீரர்களை அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் கவுரவப் படுத்தினார்.

9 views

அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - 4 கோடியே 29 லட்சத்தைக் கடந்த மொத்த பாதிப்பு

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்தைத் தாண்டியது.

10 views

சீனாவில் புயல்...கனமழை...வெள்ளப்பெருக்கு - ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

மத்திய சீனாவில் புயல் மற்றும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.