தீவிரமாகப் போகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவிப்பு

அமெரிக்காவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாவதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக பைடன் தெரிவித்துள்ளார்.
தீவிரமாகப் போகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவிப்பு
x
அமெரிக்காவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாவதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக பைடன் தெரிவித்துள்ளார். அந்நாட்டில் தொடர்ந்து கொரோனா பரவல் எண்ணிக்கை ஏறு முகமாக உள்ளது. குறிப்பாக டெல்டா வகை கொரோனாவால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 80 சதவீதம் இளைஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சிலி நாடு புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. தரவுகளின் அடிப்படையில் உலக அளவில், சிலியில் தான் அதிகம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்ட வெறும் 5 மாதங்களுக்குள்ளாகவே 80 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது. வயது முதியோர், உடல் ஊனமுற்றோர், அல்லது வீட்டை விட்டு வெளிவர முடியாத சூழலில் இருப்போரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் விதமாக, டம்பா பே பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்று இச்சேவையை செய்து வருகிறது. வெறும் நான்கே நாட்களில் 400க்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும், இதனால் பணியாளர்களை அதிகப்படுத்த இருப்பதகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.அமெரிக்காவில் உள்ள வால்ட் டிஸ்னி நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. டெல்டா வகை கொரோனாவால் அமெரிக்கர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை வால்ட் டிஸ்னி நிறுவனம் கட்டாயமாக்கியுள்ளது. இதற்கு முன்னதாகவே கூகுள், ஊபர், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கட்டாய தடுப்ப்பூசியை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மெக்சிகோவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட உதவிப்பொருட்கள் கியூபா வந்தடைந்தன. கியூபாவில் அரசுக்கெதிராக மக்கள் நடத்தும் போராட்டங்களுக்கு அந்நாட்டு அதிபர் அமெரிக்காதா காரணம் என்று குற்றம் சாட்டினார். இந்நிலையில், ரஷ்யா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் கியூபாவிற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அந்த வகையில் மெக்சிகோ சார்பாக அனுப்பி வைக்கப்பட்ட உணவுப்பொருட்கள், மருந்துகள், மற்றும் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு கியூபா வந்தடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்