உலகின் மிகப் பெரிய மிதக்கும் நிலையம்;நீரில் மிதக்கும் சூரியசக்தி பேனல்கள் - 112 ஏக்கரில் பிரமாண்ட உற்பத்தி மையம்

உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய சக்தி மின்சார உற்பத்தி நிலையம் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய மிதக்கும் நிலையம்;நீரில் மிதக்கும் சூரியசக்தி பேனல்கள் - 112 ஏக்கரில் பிரமாண்ட உற்பத்தி மையம்
x


உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய சக்தி மின்சார உற்பத்தி நிலையம் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு ஆச்சர்ய  தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

சிங்கப்பூரின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு பெரிய நீர் தேக்கத்தில் 60 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட மிகப் பெரிய சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது

நீர் பரப்பில் மிதக்கும் சூரிய சக்தி பேனல்களை கொண்டுள்ள இந்த மின் உற்பத்தி நிலையத்தை செம்கார்ப் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

112 ஏக்கர்கள் பரப்பளவு கொண்ட, 1.22 லட்சம் சூரிய சக்தி பேனல்களை கொண்டுள்ள இந்த
மின் உற்பத்தி நிலையம் உலகின் மிகப் பெரிய மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையமாக உருவெடுத்துள்ளது.

நீண்ட காலத்திற்கு, காற்று, மழை போன்ற இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டு உறுதியாக
செயல்படும் திறன் கொண்ட நிலையமாக இதை வடிவமைத்துள்ளதாக, இதை கட்டமைத்த
செம்கார்ப் நிறுவனத்தின் பிராந்திய மேலாளரான ஜென் டேன் கூறுகிறார்.

கட்டிடங்களின் மேற்கூரைகளில் அமைக்கப்படும் சூரியசக்தி பேனல்களை விட, நீரில் மிதக்கும் சூரிய சக்தி பேனல்களின் செயல் திறன் 5 முதல் 15 சதவீதம் அதிகமாக இருக்கும் என்கிறார். சூரிய சக்தி பேனல்கள் சூடாகாமல் குளிர்ச்சியாக வைத்திருக்க, நீரோட்டம் உதவும் என்பதே இதற்கு காரணமாகும்.

இந்த சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் ஆண்டுக்கு 32,000 டன்கள் கார்பன் வெளிப்பாட்டை குறைக்க முடியும் என்று செம்கார்ப் நிறுவனம் கூறியுள்ளது.

 7,000 கார்களை சிங்கப்பூர் சாலைகளில் இருந்து அப்புறப்படுத்தினால் மிச்சமாகும் கார்பன் அளவிற்கு இது இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்