ராணுவப் பயிற்சியில் ரோபாக்கள் பயன்பாடு - ரோபோக்களுடன் வீரர்களுக்கு பயிற்சி

ராணுவப் பயிற்சியில் ரோபாக்கள் பயன்பாடு - ரோபோக்களுடன் வீரர்களுக்கு பயிற்சி
ராணுவப் பயிற்சியில் ரோபாக்கள் பயன்பாடு - ரோபோக்களுடன் வீரர்களுக்கு பயிற்சி
x
அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்துமாறு அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்துள்ளது. அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரித்த ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. அமெரிக்காவில் 68 லட்சம் பேருக்கு மேல் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் அரிதாக சிலருக்கு ரத்தம் உறைதல் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்த அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்துள்ளது.  

அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் கருப்பின இளைஞர் டான்ட் ரைட் என்பவரை போலீசார் சுட்டுக் கொன்ற நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து 3-ஆவது நாளாக அமெரிக்க மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புரூக்ளின் சென்டர் பகுதிக்கு பதாகைகளை ஏந்தி மக்கள் பேரணியாக சென்றனர். தொடர்ந்து அங்குள்ள காவல் கட்டுப்பாட்டு மையம் முன்பாக திரண்ட மக்கள், போலீசாருக்கு எதிராக பாடல்களைப் பாடியும், செல்போன் டார்ச்சை ஆன் செய்தும், தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர். 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். முகமது நபியின் கேலிச்சித்திர விவகாரத்தில் பிரான்ஸ் தூதரை வெளியேற்றவில்லை என போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்த மத குரு ரிஸ்வியை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானில் தொடர் போராட்டங்கள் வெடித்துள்ளது. இதில் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.  

கரீபியன் தீவில் உள்ள செயின்ட் வின்சென்ட் தீவுப்பகுதியில் "லா சுஃப்ரியர்" எரிமலை வெடித்ததில் அப்பகுதியில் உள்ள கிராமங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், எரிமலை வெடிப்பிற்கு முன் மற்றும் எரிமலை வெடித்த பிறகான சாட்டிலை படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனா தொற்று அதிவேகத்தில் பரவிவரும் நிலையில், அங்கு 40 வயதுக்கும் குறைவானவர்கள் அதிக அளவில் பாதிப்புக்கு ஆளாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவலின் முதல் அலையில் வயது முதிர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும், தற்போதைய இரண்டாம் அலையில், 40 வயதுக்கும் குறைவானவர்களும், இளைஞர்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு சுகாதார அதிகாரி கூறி உள்ளார். 40 வயதுக்கு குறைவானவர்களே அவசர சிகிச்சைப் பிரிவிலும், அதிக அளவு அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். 

ராணுவப் பணிகள் நவீனமாகி வரும் இந்த கால கட்டத்தில், பிரான்ஸ் நாட்டில் ரோபோக்கள் மூலம் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கியர் பகுதியில் உள்ள ராணுவ முகாமில், பயிற்சியின்போது ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த ரோபோக்களை போஸ்டன் டைனமிக்ஸ் மற்றும் நெக்ஸ்டர் நிறுவனம் இணைந்து வடிவமைத்து உள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்