அமெரிக்காவில் பரபரப்பு : போலீஸ் துப்பாக்கிச் சூடு - ஒரு பெண் உயிரிழப்பு

அமெரிக்காவில் ஜோ பைடன் அதிபராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வெடித்ததால் வாஷிங்டனில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் பெண் ஒருவர் பலியானார்.
அமெரிக்காவில் பரபரப்பு : போலீஸ் துப்பாக்கிச் சூடு - ஒரு பெண் உயிரிழப்பு
x
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில், வருகிற 20-ம் தேதி, 46-வது அதிபராக பொறுப்பேற்க உள்ளார். ஆனால், தற்போதைய அதிபரான டொனால்ட் டிரம்ப், அவரது வெற்றியை ஏற்க மறுத்து வருகிறார். நீதிமன்றங்களிலும் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, பைடனுக்கு வெற்றிச் சான்றிதழை வழங்கும் பணிகளை அமெரிக்க நாடாளுமன்றம்  மேற்கொண்டு வருகிறது. இதற்காக கூட்டம் நடைபெற்று வந்த நிலையில்,  தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம் நோக்கி டிரம்ப் ஆதரவாளர்கள் பேரணியாக சென்றனர். 

கேபிடல் ஹில்ஸ் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கூறியும் மறுத்ததால், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில், பெண் ஒருவர் மீது குண்டு பாய்ந்து உயிரிழந்தார். போலீசார் பலருக்கும் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. வன்முறையை தொடர்ந்து, வெள்ளை மாளிகை பகுதி அமைந்துள்ள இடம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்